பள்ளி கைப்பந்து போட்டி: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’

பள்ளி கைப்பந்து போட்டியில், செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

Update: 2019-09-08 00:07 GMT
சென்னை,

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளையொட்டி, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் 16 பள்ளி அணிகள் பங்கேற்ற கைப்பந்து போட்டி அந்த பள்ளி வளாகத்தில் நடந்தது. தொடக்க விழாவில் ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சேதுபாஸ்கரா மெட்ரிகுலேசன் பள்ளி (அம்பத்தூர்) 2-வது இடத்தையும், வேலம்மாள் பள்ளி (முகப்பேர்) 3-வது இடத்தையும், ராயபுரம் பி.ஏ.கே. பள்ளி அணி 4-வது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையும், கோப்பையும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளான வருகிற 24-ந் தேதி அன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில் வைத்து வழங்கப்படும் என்று நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டி.ராஜகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்