பெண்கள் உலக குத்துச்சண்டை தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா வெற்றி

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது.

Update: 2019-10-04 22:25 GMT
உலன் உடே, 

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 54 கிலோ உடல் எடைப்பிரிவின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் மிசிட்மாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அசாமை சேர்ந்த 21 வயதான ஜமுனா போரோ தனது அடுத்த சுற்றில் அல்ஜீரியாவின் ஒவ்டாட் ஸ்போவை சந்திக்கிறார்.

மேலும் செய்திகள்