ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரருக்கு 4 ஆண்டு தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரருக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-01 00:16 GMT
புதுடெல்லி,

இந்திய இளம் மல்யுத்த வீரர் ரவிந்தர் குமாரிடம் சேகரிக்கப்பட்ட ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி, அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது. மேலும் அவரிடம் மாதிரி சேகரிக்கப்பட்ட பிறகு பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள் தகுதி இழப்பு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்