கூடைப்பந்து: சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றி

கூடைப்பந்து போட்டியில், சென்னை பல்கலைக்கழக அணிகள் வெற்றிபெற்றன.

Update: 2020-02-21 22:40 GMT
புவனேசுவரம்,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நேற்று தொடங்கியது. இதில் 17 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து 200 பல்கலைக் கழகங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங் கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.அணி (சென்னை), மகாத்மா காந்தி பல்கலைக்கழக (உத்தரபிரதேசம்) அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 25-9, 25-17, 25-21 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது. கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை பல்கலைக்கழக அணி 87-58 என்ற புள்ளி கணக்கில் குருசேத்ரா பல்கலைக்கழக அணியை (அரியானா) எளிதில் தோற்கடித்தது. இதன் பெண்கள் பிரிவில் சென்னை பல்கலைக்கழக அணி 85-79 என்ற புள்ளி கணக்கில் ஐ.டி.எம். பல்கலைக்கழகத்தை (குவாலியர்) போராடி வீழ்த்தியது.

மேலும் செய்திகள்