சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் கூடுதல் எடைப்பிரிவுகள் சேர்ப்பு

சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் கூடுதலாக 57, 71, 86 கிலோ எடைப்பிரிவுகள் புதிதாக இணைக்கப்படுகிறது.

Update: 2021-07-04 02:06 GMT
புதுடெல்லி,

தற்போது சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 10 வகையான எடைப்பிரிவுகளில் பந்தயங்கள் நடத்தப்படுகிறது. இனிமேல் ஆண்களுக்கான எடைப்பிரிவு 13 ஆகவும், பெண்களுக்கான எடைப்பிரிவு 12 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. அதாவது ஆண்களுக்கு புதிதாக 3 எடைப்பிரிவும், பெண்களுக்கு கூடுதலாக 2 எடைப்பிரிவும் சேர்க்கப்படுகிறது. 

ஆண்களுக்கான குறைந்தபட்ச எடைப்பிரிவு 49 கிலோவில் இருந்து 48 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. 57, 71, 86 கிலோ எடைப்பிரிவுகள் புதிதாக இணைக்கப்படுகிறது. பெண்களுக்கு 50 மற்றும் 70 கிலோ எடைப்பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையோர் மற்றும் சீனியருக்கான சர்வதேச போட்டிகளில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி முதல் புதிய எடைப்பிரிவு பந்தயங்கள் சேர்க்கப்படும். 

மேலும் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் நடுவரின் முடிவை எதிர்த்து அணிகள் அப்பீல் செய்யும் வாய்ப்பு 2-ல் இருந்து 3 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடுவரின் முடிவை எதிர்த்து செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தால் ரூ.75 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை கைவிடப்படுவதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்