ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் (நேற்று புதிதாக 896 பேருக்கு தொற்று) வருகிற 12-ந் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

Update: 2021-07-09 03:30 GMT
இது அடுத்த மாதம் 22-ந் தேதி வரை நீடிக்கும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க 2 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

அவசரநிலை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் மந்திரி தமயோ மருகவா அறிவித்துள்ளார். முதலில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிைய பார்க்க ஸ்டேடியத்திற்குள் உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி 
அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்ேபாது அதுவும் இல்லை என்றாகி விட்டது. இந்த ஒலிம்பிக் திருவிழா ரசிகர்கள் இன்றி வித்தியாசமான அனுபவத்தை சந்திக்கப்போகிறது. 

ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம் ஒட்டுமொத்தத்தில் ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று ேபாட்டி அமைப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். இனி டிக்கெட் வருவாய் துளியும் கிடைக்காது என்பதால் அந்த வகையில் ஒலிம்பிக் கமிட்டி பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளது.

மேலும் செய்திகள்