குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே அவர் தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஏலம் விட்டு இருக்கிறார்.

Update: 2021-08-20 06:56 GMT
போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி பேஸ்புக் மூலம் விடுத்து இருந்த வேண்டுகோளை பார்த்த அவர் ஆன்-லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்த பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார். அதேநேரத்தில் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

மேலும் செய்திகள்