தேசிய விளையாட்டு தினம்: வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்கள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வீரர், வீராங்கனைகளுக்கு உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-08-29 19:38 GMT
சென்னை, 

இந்திய ஆக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந்தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி தமிழக அரசின் விளையாட்டுத்துறை மற்றும் எஸ்.டி.ஏ.டி. சார்பில் தேசிய விளையாட்டு தின விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 

இதில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் 15 பேருக்கு சீருடை தொகுப்பும், குத்துச்சண்டை, கால்பந்து, தடகள வீரர் வீராங்கனைகள் 100 பேருக்கு விளையாட்டு உபகரணங்களும், சீருடையும் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், தயாநிதிமாறன் எம்.பி., பரந்தாமன் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா, எஸ்.டி.ஏ.டி. முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, முன்னாள் நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் யோகா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற சீர்காழியை சேர்ந்த சுபானுவின் யோகாவும் நடைபெற்றது.

மேலும் செய்திகள்