பார்முலா ஒன் கார் பந்தயம்: சீனாவிலிருந்து முதல் வீரராக களம் காணும் கியான்யூ சோவ்!
சீனாவை சேர்ந்த கியான்யூ சோவ் எப்-1 கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் சீன வீரராக மாறியுள்ளார்.;
பாரிஸ்,
பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் சீன வீரரானார் கியான்யூ சோவ். 22 வயதான அவர் வால்டேரி பொட்டாஸ் உடன் அணி சேர உள்ளார். இவர்கள் இருவரும் மெர்சிடெஸ் பென்ஸ் காரில் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், சீனாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தய ஓட்டுனராக கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அவர் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் பயிற்சி ஓட்டுனராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்பா ரோமியோ அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.