புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணிகள் வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

Update: 2022-01-24 16:30 GMT
பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 41 - 22 என்ற புள்ளி கணக்கில் பிங்க் பாந்தர்ஸ்  அணியை வீழ்த்தி வெற்றியை பெற்றது. 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 42 - 25 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்