தூத்துக்குடியில் பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது

தூத்துக்குடியில் அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியை வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-23 04:17 GMT
தூத்துக்குடி:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பெருந்துறைமுக விளையாட்டு கழகம் ஆகியவை இணைந்து, அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டிகளில் 4 பெருந்துறைமுக அணிகள் பங்கேற்று உள்ளன. 

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக தலைவர் சுரேஷ் பாபு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துறைமுக போக்குவரத்து மேலாளர் பிரபாகர், தலைமை பொறியாளர் ரவிக்குமார், நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி சாகு, துணை பாதுகாவலர் பிரவீன்குமார் சிங் மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த முதல் போட்டியில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணியும், ஒடிசா பாரதீப் துறைமுக அணியும் விளையாடின. இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி 58-28 என்ற புள்ளிக்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து போட்டிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. அன்று மாலையில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்