ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
இந்தியா வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.;
சிட்னி,
ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-9 என்ற கணக்கில் வெங் ஹாங் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரனாய், 23-21 என்ற கணக்கில், இரண்டாவது செட்டை தனதாக்கினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பரபரப்பான 3வது செட்டை 22-20 என்ற கணக்கில் கைப்பற்றி, இந்தியா வீரர் பிரனாயை வீழ்த்தி சீனாவின் வெங் ஹாங் யாங் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.