கோவை மாணவர் சாதனை

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் சாதனை படைத்தார்;

Update:2022-06-03 21:30 IST

கோவை

தேசிய அளவில் மாணவ-மாணவிகளுக்கான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி அரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

13, 15, 17, 19 என வயது வாரியாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 17 வயது பிரிவு போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் பிரணவ் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவருக்கு பயிற்சியாளர், பெற்றோர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்