உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் வெண்கலம் வென்றார்

சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.;

Update:2023-03-25 04:00 IST

Image Courtesy : @issf_official twitter

போபால்,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார். 262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்ற 52 பேரில் இருந்து தகுதி சுற்று மூலம் டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

தகுதி சுற்றில் 2-வது இடத்தை பிடித்த இந்திய வீராங்கனை ரமிதா இறுதி சுற்றில் 260.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்று பதக்கத்தை நழுவ விட்டார். இதில் சீனாவின் ஹியாங் யுடிங் 265.7 புள்ளிகளுடன் முதலிடத்தை வசப்படுத்தி தங்கமங்கையாக ஜொலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்