மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.;

Update:2022-09-13 22:56 IST

காரைக்குடி, 

காரைக்குடி சகாயமாதா மெட்ரிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பள்ளி முதல்வர் பிரிட்டோ தலைமை தாங்கினார். டென்னிஸ் கழக செயலாளர் மற்றும் இணை செயலாளர் பிரபாகரன், ஜெயவிக்னேஷ் ஆகியோர் வரவேற்றனர். போட்டி அமைப்பாளர் மெய்யப்பன் பரிசளிப்பு விழாவை தொடங்கி வைத்து பேசினார். முதலில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்ட பிரிவில் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் சர்வின், 16 வயது ஆண்கள் பிரிவில் கார்மல் பள்ளி மாணவர் ஜெய்சந்திரன், பெண்கள் பிரிவில் துபாய் மழலையர் பள்ளி ஆதிரா ஆகியோர் முதலிடம் பெற்றனர். 13 வயது ஆண்கள் பிரிவில் வித்யாகிரி பள்ளி மாணவர் ஹரிகேஷ் மற்றும் பெண்கள் பிரிவில் மகரிஷி பள்ளி மாணவி பார்கவி ஆகியோர் முதலிடம் பெற்றனர். 13 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பொது பிரிவில் மகரிஷி பள்ளி மாணவர் ஜெனகன் மற்றும் பெண்கள் பிரிவில் அமராவதிபுதூர் குருகுலம் பள்ளி மாணவி மேனகா ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்