டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டிக்கு கனடா முன்னேற்றம்

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் கனடா பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Update: 2022-11-27 07:02 GMT

Image courtesy: AFP 

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடைபெற்றுவரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா முன்னேறி உள்ளது. மலாகா நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும் ஸ்பெயினும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

முதலில் நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் இத்தாலியின் லோரென்சோ சோனேகோ 7-6 (7-4) 6-7 (5-7) 6-4 என்ற செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை தோற்கடித்தார். பின்னர் உலகின் ஆறாவது நிலை வீரரான பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், லோரென்சோ முசெட்டியை 6-3 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதனால் போட்டி 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஆனது.

பின்னர் இரட்டையர் பிரிவில் பெலிக்ஸ் ஆகர்- வாசெக் போஸ்பிசில் ஜோடி 7-6 (7-2) 7-5 என்ற செட் கணக்கில் மேட்டியோ பெரெட்டினி மற்றும் பேபியோ போக்னினிக்கு எதிராக வெற்றி பெற்றனர். இதனால் இத்தாலியை 2க்கு 1 என்ற கேம் கணக்கில் கனடா வீழ்த்தியது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கனடா, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்