'தினத்தந்தி' செய்தி எதிரொலிவலதுகரை வாய்க்காலில் தூர்வாரும் பணி
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் வலதுகரை வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;
அம்மாபேட்டை
மேட்டூர் அணையில் இருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும். மேலும் தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதர் மண்டி கிடக்கும் வலதுகரை வாய்க்கால்கரையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி'யில் வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களாக பொதுப்பணித்துறை பணியாளர்கள் வலது கரை வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதனால் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.