"பயணம் நம்பமுடியாதது"- யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடருக்கு பிறகு ஓய்வு பெறும் நட்சத்திர வீரர்

அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் யுஎஸ் ஓபன் 2023 தொடருக்கு பின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2023-08-25 07:49 GMT

image courtesy;AFP

வாஷிங்டன்,

இந்த ஆண்டிற்கான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு ஓய்வு பெற உள்ளதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் அறிவித்துள்ளார். இஸ்னர் தனது ஓய்வு முடிவை சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஏடிபி தொடர்களில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, டென்னிசிலிருந்து விடைபெறும் நேரம் இது. அமெரிக்க ஓபன் எனது இறுதி போட்டியாக இருக்கும். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் எனது அற்புதமான குடும்பத்துடன் செலவழிக்க போகும் ஒவ்வொரு நொடியையும் நான் எதிர்நோக்குகிறேன். என்னுடைய பயணத்தில் எண்ணிலடங்கா போட்டிகள். என்னுடைய பயணம் இனிமையானது. இதில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இஸ்னர் ஏடிபி தொடர்களில் 16 ஒற்றையர் பட்டங்களையும், எட்டு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார். மேலும் அவருடைய சிறந்த தரநிலையாக 2018ஆம் ஆண்டு டென்னிஸ் தரவரிசையில் 8-வது இடம் பிடித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்