தமிழகத்திற்கு மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு குறைப்பு - அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Update: 2023-04-27 11:46 GMT

சென்னை,

தலைமை செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கிட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் கிலோ லிட்டராக மண்ணெண்ணெய் குறைக்கப்பட்டது. தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. தமிழக அரசு மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்து விட்டதாக தோற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ல் 7,510 கிலோ லிட்டராக இருந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஏப்ரலில் 4,000கி.லி ஆக குறைக்கப்பட்டது. தற்போது 2,012 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது.

மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதியும் அதை கருத்தில் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு தற்போது 9 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் தேவை உள்ளது. மண்ணெண்ணெய், கோதுமை தேவையான அளவு ஒதுக்கக்கோரி மத்திய மந்திரியிடம் நேரில் வலியுறுத்துவேன் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்