விஜயசாந்தியின் 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' பட டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் பிரபல நடிகர் நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன் ஆவார். நந்தமுரி கல்யாண் ராம் நடித்த அதானொக்கடே, ஹரே ராம், 118 போன்ற அதிரடித் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இவர் தனது 21-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.