தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை பாயும் - எச்சரித்த நடிகை
தனது விவாகரத்து குறித்து தொடர்ந்து பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை மஹி விஜ் பதிலளித்துள்ளார்.;
சென்னை,
சமீப காலமாக, நடிகை மஹி விஜ் - ஜெய் பானுஷாலி விவாகரத்து பெற உள்ளதாக நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன . அவர்கள் தங்கள் 14 வருட திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது விவாகரத்து குறித்து தொடர்ந்து பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை மஹி விஜ் பதிலளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியான வதந்திக்கு பதிலளித்த அவர், அந்த கூற்றுக்களை "தவறானவை’’ என்று கூறினார். மேலும் தவறான தகவல்களைப் பரப்பும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்தார்.
ஜெய் பானுஷாலி மற்றும் மஹி 2011-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தைகள் இல்லை. இதன் விளைவாக அவர்கள் 2017-ல் பாபு ராஜ்வீர் மற்றும் ருஷியை தத்தெடுத்தனர். பிறகு 2013-ல் இவர்களுக்கு ஐவிஎப்(IVF) மூலம் மகள் தாரா பிறந்தார்.
2004 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான தபனாவில் நடித்திருந்தார் மஹி விஜ். மலையாளம் மற்றும் கன்னடத்திலும் நடித்துள்ளார்.