'லால் சலாம்' நடிகையின் புதிய படத்திலிருந்து முதல் பாடல் வெளியீடு

தெலுங்கு திரைப்படமான ராஜமுந்திரி ரோஸ் மில்க் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அனந்திகா சனில்குமார்.;

Update:2025-03-05 01:19 IST

சென்னை,

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை தொடர்ந்து, இந்நிறுவனம், சன்னி தியோலின் ஜாத், நித்தினின் ராபின்ஹுட் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் '8 வசந்தலு' என்ற படத்தையும் தயாரிக்கிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அந்தமா அந்தமா' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. இதனை ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் ஆவணி மல்ஹர் பாடி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்