“ஏ” சான்றிதழ் படங்கள் வேண்டாமே - பேரரசு பேச்சு

நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி நடித்துள்ள ‘குற்றம் புதிது' திரைப்படம் வருகிற 29ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-08-21 11:46 IST

சென்னை,

அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் குற்றம் புதிது. இதில் காதநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மேலும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அதிரடியாக உருவாகியுள்ள இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.

கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் 29 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.


சென்னையில் நடந்த பட விழாவில் பேரரசு பேசுகையில், “திரில்லர் படங்கள் எடுப்பதும் கடினம். இறுதிவரை ரசிகர்களை பரபரப்பிலேயே வைத்திருக்க வேண்டும். என்னதான் திரில்லர் என்றாலும், ‘ஏ' சான்றிதழ் இல்லாமல் படம் வெளிவர வேண்டும். தியேட்டர் இல்லாமை, ஓ.டி.டி. தள விற்பனை, ரசிகர்கள் வருகை என பல விஷயங்களை ‘ஏ' சான்றிதழ் படங்கள் பாதிக்கும். பேமிலி ஆடியன்ஸ் வருகை படத்துக்கு மிகவும் முக்கியம்.

லோகேஷ் கனகராஜ், நெல்சன், நோவா ஆம்ஸ்ட்ராங் என இப்போது வரும் இயக்குனர்கள் எல்லாமே ஹீரோக்கள் மாதிரி இருக்கிறார்கள். வாய்ப்பு வந்தால் உடனே நடித்துவிடுங்கள். இயக்கும் படங்கள் திடீரென்று தோல்வி அடைந்துவிட்டால், அதன்பிறகு நம்மை கூப்பிட மாட்டார்கள்.பெண் பார்க்க செல்லும்போது, பெண் பிடிக்கவில்லை என்றால், வேறொரு பெண்ணை பார்க்க சென்றுவிட வேண்டும். அதைவிடுத்து அந்த பெண்ணை தொடர்ந்து விமர்சிக்க கூடாது. அப்படித்தான் ‘யூ-டியூப்' சேனல்களை வைத்துக்கொண்டு சிலர் கேவலமாக படங்களை விமர்சிக்கிறார்கள். அவர்களை பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்களை உடனுக்குடன் தட்டிவிட வேண்டும். இல்லையென்றால் ஆபத்து” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்