அல்லு அர்ஜுன் - அட்லீ படம்: அடுத்தடுத்து கசியும் தகவல்...ரசிகர்கள் அதிருப்தி

கடந்த சில நாட்களாக படத்தின் நடிகர்கள் குறித்து தொடர்ச்சியாக கசியும் தகவல்கள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.;

Update:2025-07-13 12:14 IST

சென்னை,

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஏஏ22xஏ6 திரைப்படம், பான் இந்திய அளவில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தாலும், மீதமுள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் உள்ளன.

இப்படத்தை பற்றிய பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் மிகப்பெரிய அளவில் இருக்கும்நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் நடிகர்கள் குறித்து தொடர்ச்சியாக கசியும் தகவல்கள் ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளன.

சமீபத்தில், ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து, ராஷ்மிகா நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக இணையத்தில் செய்தி வைரலானது.

தற்போது, அல்லு அர்ஜுன் தாத்தா, தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என நான்கு வெவ்வேறு வேடங்களில் நடிப்பதாக மற்றொரு செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்கள் பற்றிய முக்கியமான விவரங்கள் கசிந்ததால், ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரூ. 800 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படும், இந்த படம் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்