'மகாபாரதம்' அமீர் கானின் கடைசி படமா?

அமீர்கான் தற்போது ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.;

Update:2025-06-03 17:17 IST

மும்பை,

நடிகர் அமீர் கான் தனது கனவு படமான 'மகாபாரதம்' கடைசி படமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்.

அமீர்கான் தற்போது 'சித்தாரே ஜமீன் பர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் கூடைப்பந்து பயிற்சியாளராக நடித்திருக்கிறார். ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை அமீர்கான் மற்றும் அபர்ணா புரோஹித் தயாரித்து இருக்கின்றனர். இந்தத்திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனையடுத்து, தனது கனவு படமான 'மகாபாரதம்' பட பணியை அமீர் கான் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில்,'சித்தாரே ஜமீன் பர்' படத்தின் புரமோஷனில் பேசிய அமீர்கான் , 'மகாபாரதம்' தனது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறினார். அவர் கூறுகையில்,

'மகாபாரதத்தை உருவாக்குவது எனது கனவு, 'சித்தாரே ஜமீன் பர்' வெளியான பிறகு, அதற்கான பணிகளை தொடங்குவேன். மகாபாரத்தை எடுத்த பிறகு அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற உணர்வு உண்டாகும் என்று நினைக்கிறேன். ஆனால், எனக்குத் தெரியவில்லை' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்