“ஆண்பாவம் பொல்லாதது” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது;

Update:2025-11-03 20:45 IST

சென்னை,

ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ‘ஜோ’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஜோ’ பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து இவர் நடித்திருக்கும் படம்தான் ‘ஆண்பாவம் பொல்லாதது’.விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் உலகளவில் 3 நாட்களில் ரூ.3.5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் நாட்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்