கடந்து வந்த பாதையை நினைவுகூர்ந்த நடிகர் அர்ஜுன் தாஸ்

அஜித் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'வீரம்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.;

Update:2025-04-15 07:13 IST

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதில், லைப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து 'மாஸ்டர், விக்ரம், ரசவாதி, அநீதி' ஆகிய படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். கடைசியாக கடந்த 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸ் தான் கடந்து வந்த பாதையை நினைவுகூறும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"வாழ்க்கை முழுமை அடைந்தது போல் உள்ளது. என்ன ஒரு அற்புதமான உணர்வு. 11 வருடங்களுக்கு முன், வீரம் படத்தின் டீசரை பதிவேற்றினேன். இன்றும் அதே திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் டீசரை எனது அஜித் சாருக்காக வெளியிடுகிறேன்! என்று பதிவிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை 'வீரம்' திரைப்படம் வருகிற மே மாதம் 1-ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்