சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் ‘தி வைவ்ஸ்’ படத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிக்க உள்ளார்.;

Update:2025-08-19 20:50 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமவுலி, நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக, விடாமுயற்சியிலும் அஜித்துக்கு வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, மூக்குத்தி அம்மன் - 2, செக்சன் 108 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கரின் ‘தி வைவ்ஸ்’ படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ரெஜினா கேசண்ட்ரா திரைத்துறைக்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனால், ரசிகர்கள் ரெஜினாவின் சிறந்த புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்