சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை புகழ்ந்த நடிகர் ஷாம்

நடிகர் ஷாம் 'அஸ்திரம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.;

Update:2025-02-25 06:42 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாம். தமிழ் சினிமாவில் கடந்த 2001 இல் வெளியான 12பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து "உள்ளம் கேட்குமே, லேசா லேசா" என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியின் தில்லாலங்கடி, விஜய்யின் வாரிசு போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.

இவர் தற்போது அரவிந்த் ராஜகோபால் இயக்கத்தில் 'அஸ்திரம்' படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நிரா மற்றும் வெண்பா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் சாம், சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை புகழ்ந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'சினிமாவில் மற்ற நடிகர்களை பார்க்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயனை கூறலாம். அவர் சாதாரனமாக சினிமாவுக்குள் வரவில்லை. பல வருடங்கள் கஷ்டப்பட்டு அனுபவத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு இப்போது பெரிய இடத்திற்கு வந்திருக்கிறார்' என்றார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்