புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.;

Update:2025-04-22 17:29 IST

சென்னை,

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த "மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை" போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

இந்தநிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு போராடும் அவருக்கு தற்போது கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவுமாறு திரைத்துறையினருக்கும் அரசுக்கும் அவரது மனைவியான ராதா கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்