திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்
நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.;
திருவண்ணாமலை,
தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாஸ்க்' என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி மாறன் சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்தநிலையில், நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் வழிபாடு செய்தார். தொடா்ந்து அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.