ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமலின் தயாரிப்பு நிறுவனம்

உன் போல் யாருமில்லையே என கமலின் ராஜ்கமல் நிறுவனம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.;

Update:2025-12-12 14:12 IST

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்தனர். அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், ரஜினிக்கு சிறப்பு வீடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் “உன் போல் யாருமில்லையே.. ஈரேழு உலகம் தேடியுமே.. மாறாத வைரம் உன் அகமே.. என் அரும் நண்பனே.. ஊர் போற்றும் இன்பனே... நீ தனி நான் தனி என்றில்லை... என்றுமே நாம் அது நிரந்தரமே” என்று குறிப்பிட்டுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரஜினி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்