பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள்: ரன்வீர் சிங் படத்திற்கு தடை விதித்த அரபு நாடுகள்

இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரன்வீர் சிங்;

Update:2025-12-12 12:35 IST

ரியாத்,

இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரன்வீர் சிங். இவர் துருந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். திரில்லர் படமான இது கடந்த 5ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், துருந்தர் படத்தை தங்கள் நாட்டில் வெளியிட 6 அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் துருந்தர் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. துருந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்