நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.;

Update:2025-12-12 11:27 IST

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

திரையுலகில் மின்னும் நட்சத்திரமாக இன்னும் திகழ்ந்து கொண்டிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளையொட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் ’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்