"படையப்பா" ரீ-ரிலீசையொட்டி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

ரஜினியின் கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.;

Update:2025-12-12 10:16 IST

சென்னை,

50 ஆண்டுகளாக, திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இன்று ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படையப்பா இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியுள்ளது.

படையப்பா படத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்து, தேங்காய் உடைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் டிஜேக்களை வரவைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், சென்னை ரோகினி திரையரங்கில் ரஜினியின் படையப்பா ரீ ரிலீஸை ரசிகர்களுடன் கண்டுகளிக்க லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர். மேலும், சென்னை காசி திரையரங்கிற்கு சென்ற இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படம் பார்க்க சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்