32-வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நிதி அகர்வால்

''பூமி'' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால்;

Update:2025-08-17 12:02 IST

சென்னை,

தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் ரவிமோகனுக்கு ஜோடியாக ''பூமி'' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

பாலிவுட்டில் கடந்த 2016-ல் சபீர் கான் இயக்கத்தில் வெளியான முன்னா மைக்கேல் படத்தில் நடித்திருந்த நிதி அகர்வால், தொடர்ந்து 2018ல் தெலுங்கில் சவ்யஸச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் சிம்புவுடன் ''ஈஸ்வரன்'' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிதி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நிதி அகர்வால், தன்னுடைய 32வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நிதி அகர்வால் அடுத்ததாக பிரபாஸுடன் ''தி ராஜா சாப்'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்