ஒன்றல்ல, இரண்டல்ல, 8 படங்கள்... ராஷ்மிகாவை விட பிஸியாக இருக்கும் நடிகை

ராஷ்மிகா மந்தனா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.;

Update:2025-09-12 20:30 IST

சென்னை,

தற்போது உள்ள  ஹீரோயின்கள் கைவசம் மிக குறைவான படங்களையே வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஷ்மிகா மந்தனா பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  ''மைசா'', ''தாமா'', ''புஷ்பா 3'', ''அனிமல் 2'', ''ரெயின்போ'' ''கேர்ள் பிரண்ட்'' ஆகிய படங்களை கவசம் வைத்திருக்கிறார்.

இருப்பினும், அவரை விட பிஸியாக இன்னொரு நடிகை இருக்கிறார். அவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக அவரின் எந்த படமும் திரைக்கு வரவில்லை என்றாலும், இப்போது அவர் கையில் 8 படங்கள் இருக்கின்றன.

பாலகிருஷ்ணாவின் "அகண்டா 2", ராகவா லாரன்ஸின் 'பென்ஸ்', பூரிஜெகநாத்-விஜய் சேதுபதி படம், சர்வானந்தின் ''நாரி நாரி நாடுமா முராரி'', பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸின் "ஹைந்தவா"', நிகிலின் 'சுயம்பு', ''மஹாராக்னி'' என்ற இந்தி படம் மற்றும் தெலுங்கில் பெண்களை மையமாகக் கொண்ட படம் ஆகியவை அவர் பணியாற்றும் படங்களாகும். 

இவற்றில், 'அகண்டா 2' இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ளது. மீதமுள்ள அனைத்தும் அடுத்த ஆண்டு மற்றும் அதற்கு அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ''பாப்கார்ன்'' மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர சம்யுக்தா. அதில் அவர் ஷைன் டாம் சாக்கோவுடன் நடித்தார். பின்னர் 'பீம்லா நாயக்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்