நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் பக்கம் ஹேக்

பிரபலங்களின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.;

Update:2025-06-25 06:53 IST

சென்னை,

பிரபல நடிகையும், பாடகியான ஸ்ருதிஹாசனின் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த பதிவில், ''என்னுடைய எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனது எக்ஸ் பக்கத்தில் தற்போது போஸ்ட் செய்யப்பட்டு வரும் பதிவுகளை நான் பதிவிடவில்லை. என் எக்ஸ் கணக்கை மீண்டும் பெறும் வரை அந்த பக்கங்களில் இருந்து வரும் மெசேஜ் மற்றும் இதர விஷயங்களுக்கு பதிலளிக்காதீர்கள்'' என தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு பிரபலங்களின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரபலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்