யாஷின் ’டாக்ஸிக்’ உடன் மோதும் மிருணாள் தாகூரின் ’டகோயிட்’
இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
அதிவி சேஷ் மற்றும் மிருணாள் தாகூர் நடித்துள்ள 'டகோயிட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வருகிற மார்ச் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது. இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷனீல் தியோ இயக்குநராக அறிமுகமாக உள்ள இந்த படத்தை சுப்ரியா யார்லகடா தயாரிக்கிறார்.
சுவாரசியமாக, இதே நாளில்தான் யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படமும் திரைக்கு வர உள்ளது. இரு படங்களில் நேரடியாக மோத உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.