அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகும் மிருணாள் தாகூர் படம்?
"டகோயிட்" படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;
சென்னை,
மிருணாள் தாகூர் கதாநாயகியாகவும் அதிவி சேஷ் கதாநாயகனாகவும் நடிக்கும் ஆக்சன் காதல் படமான "டகோயிட்" படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சேஷுக்கு சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
"டகோயிட்" படத்தை கிறிஸ்துமஸ் சமயத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தநிலையில், இப்போது அது அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ருதி ஹாசன் படத்திலிருந்து வெளியேறியபோது, படம் ஏற்கனவே பல சிக்கல்களைச் சந்தித்தித்தது, இதனால் படக்குழு பல மாதங்கள் தயாரிப்பை நிறுத்தி, பின்னர் அவருக்குப் பதிலாக மிருணால் தாகூரை மாற்றியது குறிப்பிடத்தக்கது.