3 ஆண்டுகளுக்குப் பிறகு...ஒன்று கூடி நினைவுகளைப் பகிர்ந்த நட்சத்திரங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்;
சென்னை,
1980கள் மற்றும் 90களில் பிரபலமான பல தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் உள்ள நடிகர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீபிரியா இல்லத்தில் ஒன்று கூடினர்.
இந்த ஒன்று கூடலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளைச் சேர்ந்த 31 நடிகர்கள் கலந்துகொண்டனர்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த ஒன்று கூடல் நிகழ்வில், நட்சத்திரங்கள் தங்களுக்கு இடையேயான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.