படம் முழுவதும் ஏஐ காட்சிகள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ள படம் 'லவ் யூ';

Update:2025-04-18 08:59 IST

சென்னை,

கன்னடத்தில் செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 'லவ் யூ' என்ற படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கி இருக்கிறார்.

இவர் பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோவிலின் அர்ச்சகராக உள்ளார். வெறும் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, டப்பிங் என அனைத்திலும் ஏஐ கையாளப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர்.

மொத்தம் 95 நிமிடங்கள் ஓடும் 'லவ் யூ' படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகி இருக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்