திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-02-02 09:49 IST

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று திருப்பதிக்கு சென்றார்.

இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசி வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்