அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் 6 கதாநாயகிகள்?
ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் கதைக்களத்தை உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.;
சென்னை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, கியாரா அத்வானி, ஊர்வசி ரௌத்தலா, வாமிகா கபி, ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் உள்ளிட்ட நடிகைகளிடம் இயக்குநர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் வந்ததில்லை என்கிறார்கள். அந்தளவுக்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.