நிச்சயதார்த்த தகவலுக்கு மத்தியில்...மோதிரத்துடன் வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா - வைரல்

கடந்த 3 ஆம் தேதி ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-10-11 13:30 IST

சென்னை,

ராஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்ததை பற்றி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ அதனை உறுதிப்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.

அவர் சமீபத்தில் தனது செல்ல நாய் ஆராவுடன் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில் அவரது விரலில் ஒரு மோதிரம் காணப்பட்டது. இதன் மூலம் ராஷ்மிகா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 3 ஆம் தேதி ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. நிச்சயதார்த்த தகவலுக்கு பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியபோது விஜய் தேவரகொண்டா மோதிரம் அணிந்திருந்தார்.

தற்போது ராஷ்மிகாவும் மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்டுருப்பது , நிச்சயதார்த்த தகவல் உண்மைதான் என்பதுபோல் தெரிகிறது. இருப்பினும் இது குறித்து இரு தரப்பிலிருந்தும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்