ரிலீஸுக்கு தயாரான அனஸ்வரா ராஜனின் முதல் தெலுங்கு படம்
நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் அபிசன் ஜீவிந்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.;
சென்னை,
நடிகர் ஸ்ரீகாந்த் மேகாவின் மகன் ரோஷன் அடுத்ததாக தேசிய விருது பெற்ற பிரதீப் அத்வைதம் இயக்கிய பீரியட் ஸ்போர்ட்ஸ் படமான சாம்பியன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இது இவரது முதல் தெலுங்கு படமாகும்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
நடிகை அனஸ்வரா ராஜன் தற்போது தமிழில் டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிசன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.