''ஆந்திரா கிங் தாலுகா'' - முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;

Update:2025-07-15 07:17 IST

சென்னை,

ராம் பொதினேனியின் ''ஆந்திரா கிங் தாலுகா'' படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 18-ம் தேதி அந்த பாடல் வெளியாக இருக்கிறது. அதை ராம் பொதினேனி இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கான வரிகளை ராம் பொதினேனி எழுத, அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தநிலையில், அதை பற்றிய எதையும் தயாரிப்பாளர்கள் இதில் தெரிவிக்கவில்லை.

மகேஷ் பாபு இயக்கியுள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்