’காந்தா’ நடிகையின் அடுத்த படம்...டிரெய்லர் வெளியீடு
இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
“ஆந்திரா கிங் தாலுகா” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் காந்தா. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதற்கிடையில், பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள புதிய படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. “ஆந்திரா கிங் தாலுகா” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ராம் பொதினேனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மகேஷ் பாபு பி இயக்கி உள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இப்படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.