'ஆரோமலே' படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பட இசையை பயன்படுத்த தடை - ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.;

Update:2025-11-19 13:58 IST

சென்னை.

சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளிவந்த படம் ‘ஆரோமலே’. கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சித்து குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஆரோமலே படத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இடம் பெற்றிருந்த பாடலை பயன்படுத்தியதாக ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்து. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ‘ஆரோமலே' படத்தில் இடம்பெற்றுள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசை மற்றும் காட்சிகளை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்