பாலிவுட்டில் அறிமுகமாகும் மற்றொரு தெலுங்கு இயக்குனர்?

கோபிசந்த் மலினேனி பாலிவுட்டில் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஜாத்' படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.;

Update:2025-02-01 16:41 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவின் மாஸ் இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட்டில் சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜாத் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தெலுங்கில் ஸ்டார் ஹீரோக்களுடன் படம் இயக்கி பல ஹிட் படங்களை கொடுத்த வம்சி பைடிபள்ளி, பாலிவுட்டில் தனது அறிமுகத்தை சில நாட்களாக திட்டமிட்டு வருகிறார். அதன்படி, அமீர்கானுடன் வம்சி பைடிபள்ளி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தெலுங்கு இயக்குனர்களின் பாலிவுட் அறிமுகம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், மற்றொரு தெலுங்கு இயக்குனர் ஒருவரின் பாலிவுட் அறிமுகம் குறித்த சமீபத்திய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி, வால்டர் வீரய்யா, வெங்கி மாமா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பாபி விரைவில் இந்தியில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவின் 'டாகு மகாராஜ்' படத்திற்குப் பிறகு, பாபி தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை.

அவர் தற்போது தனது இந்தி படத்துக்கான ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்